வெளிநாடொன்றிலிருந்து பொலிஸ் உயரதிகாரிக்கு கொலை மிரட்டல்

tamilni 462

வெளிநாடொன்றிலிருந்து பொலிஸ் உயரதிகாரிக்கு கொலை மிரட்டல்

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

யுக்திய தேடுதல் வேட்டையின் கீழ் பிரதேச போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்தமை குறித்து இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை ஐஸ் போதைப்பொருளுடன் கம்பஹா பொலிஸார் கைது செய்திருந்தனர்.

“நீ எங்களது நண்பர் ஒருவரை கைது செய்திருக்கின்றாய், கூடுதலாக ஆடாத, உனது உயிர் குறித்து அவதானத்துடன் இரு” என தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Exit mobile version