உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

மாத்தறையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையை மீறி சென்ற காரை நிறுத்துமாறு பொலிஸார் மறித்துள்ளனர். எனினும் உத்தரவை மீறி கார் தொடர்ந்து பயணித்துள்ளது.

இதன்போது ​​பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச் சென்ற கார், மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் இரண்டு பேர் பயணித்த நிலையில் காரை நிறுத்திவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.

இந்த நிலையில் காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version