23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

Share

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

2016 ஏப்ரல் மாதம் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) இலங்கைக் கடல் பகுதியில் நடத்திய சோதனையின் போது பதினேழு சந்தேக நபர்கள் 111.82 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்தேகநபரான பாகிஸ்தானியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபர் பிணை நிபந்தனைகளை கடைபிடிக்கத் தவறிய நிலையில், உயர் நீதிமன்றில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் தேடப்படும் நபரைக் கைது செய்வதில் காவல்துறைக்கு உதவ 071-8591881 அல்லது 011-2343333 என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...

21
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்...