18 27
இலங்கைசெய்திகள்

தமிழர்பகுதி காணியை அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விரட்டியடிப்பு

Share

தமிழர்பகுதி காணியை அபகரிக்க முயன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விரட்டியடிப்பு

மட்டக்களப்பு(batticaloa) திருப்பெருந்துறை மறுமலர்ச்சி விளையாட்டுக்கழக மைதானத்தை தனது காணி என உறுதி உட்பட ஆவணங்களுடன் வந்து வேலி நாட்ட முயன்ற கொழும்பைச்(colombo) சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அத்தியட்சகர் ஒருவரை பொதுமக்கள் அங்கிருந்து விரட்டியடித்துள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (23) இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் காவல்துறை அத்தியட்சகராக (எஸ்.பி.பி) கடமையாற்றி 2023 ம் ஆண்டு ஓய்வு பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்தவர் குறித்த பிரதேசத்திலுள்ள மறுமலர்ச்சி விளையாட்டுக் கழக மைதானமாக பயன்படுத்திவரும் ஒருபகுதியை இன்று பகல் 11.00 மணியளவில் ஆட்களுடன் வந்து கட்டைகள் கொண்டு அடைக்க முற்பட்டார்.

இதனையடுத்து அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் இது விளையாட்டு மைதான காணி இதனை அடைக்க விடமுடியாது என தெரிவித்து அடைக்க விடாது தடுத்ததையடுத்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

இதன் போது ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தான் 2023 ம் ஆண்டு ஒருவரிடம் இருந்து 15 பேச் காணியை சட்ட ரீதியாக சட்டத்தரணி ஊடாக வாங்கியுள்ளதாகவும் தன்னிடம் சட்ட ரீதியான ஆவணங்கள் உள்ளதாக காட்டி தனது காணியை அடைக்க விடாது தடுத்துள்ளதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் குறித்த காணி கடந்த 1895 ம் ஆண்டு தொடக்கம் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருவதாகவும் இது அரச காணி எனவும் இவர் ஒரு காவல்துறை அதிகாரி அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணியை அபகரிக்க வந்துள்ளர். இவரைப் போல கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவர் ஆவணங்களை கொண்டுவந்து இது தனது காணி என சொந்தம் கொண்டாடிய நிலையில் அவரை தடுத்ததையடுத்து அவர் போனவர் போனவர்தான் வரவில்லை.

அவ்வாறு இந்த மைதானத்தில் உள்ள காணியை அடைக்கவிடாது தடுத்தபோது காவல்துறை அதிகாரி இந்த மைதான காணி 10 பேருக்கு இருப்பதாகவும் இதில் 15 பேச் காணியை தான் ஒருவரிடம் வாங்கியதாகவும் தனது 15 பேச் காணியை தருமாறும் தான் மைதானத்தை புனரமைத்து தருவாகவும் அவர் தெரிவித்தார்.

இவர் என்ன காரணத்துக்காக மைதானத்தை புனரமைத்து தரவேண்டும். நாங்கள் குறித்த காணியை விற்பனை செய்தவர் யார் அவரை வரவழையுங்கள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் யாவும் போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிவித்து வேலி அடைக்கவிடாது தடுத்தோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் மக்கள் குறித்த காணிக்கு சொந்தம் கொண்டாடிய காவல்துறை அதிகாரியை வேலியடைக்க விடாது தடுத்தனர். இதனையடுத்து குறித்த காவல்துறை அதிகாரி தடுத்த மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அவர்களை எச்சரித்துவிட்டு அங்கிருந்து ஆட்களுடன் வெளியேறிச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக மட்டு தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...