பொலிஸாரினால் தமிழ் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை

tamilni 198

பொலிஸாரினால் தமிழ் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை

கந்தானை – பொல்பிதிமுகலான – ஜயமாவத்தை பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்று அதிகாலை பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

சபுகஸ்கந்த பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கு சென்ற போது பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஜெயராஜ் என அழைக்கப்படும் நபர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5ஆம் திகதி இந்த மீன் வியாபாரியின் வீட்டுக்கு வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, ​​43 வயதான மீன் வியாபாரி, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Exit mobile version