உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ குறித்துப் பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று விளக்கம் அளித்துள்ளது.
சம்பவ வீடியோவில், குறித்த பெண் தன்னை ‘பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் சகோதரி’ என்று அடையாளப்படுத்தி, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது பதிவாகியிருந்தது.
போலியான அடையாளத்தை நிராகரித்தல்
இது குறித்துப் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தப் பெண் கூறியது முற்றிலும் போலியானது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் அத்தகைய எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் விளக்கமளித்துள்ளது.

