tamilnivv 3 scaled
இலங்கைசெய்திகள்

பொலிஸாரின் சர்ச்சைக்குரிய கைது நடவடிக்கை

Share

குருநாகலில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யும் போது இரண்டு அதிகாரிகள் பலத்தை பயன்படுத்துவதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருவது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.

குறித்த காணொளியில் இரண்டு பொலிஸார், சந்தேக நபர் ஒருவரை தரையில் கிடத்தி கயிற்றால் பிணைப்பது காட்டப்படுகிறது.

இதன்போது ஒரு அதிகாரி சந்தேக நபரின் மீது அமர்ந்துள்ளார், மற்றவர் சந்தேக நபரின் கால்களை கயிற்றால் பிணைக்கிறார்.

இந்தநிலையில் டிசம்பர் 26 ஆம் திகதி குருநாகல் டோரடியாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் திருட்டுகள் என சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சந்தேகநபரை கைது செய்ததாக அவர் கூறியுள்ளார்.

காணொளியில் காட்டப்படுபவர், போதைப்பொருளுக்கு அடிமையானவர், போதைப்பொருள் விற்பனை மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு தினசரி ஈடுபட்டு வந்தவராவார்.

கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரின் வசம் 2 கிராம் ஹெராயின் இருந்தது. கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரைக் கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகள், அவரைத் தாக்க முற்படவில்லை” என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...