6 10
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் பொலிஸாரை தாக்கிய பெண்கள் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

Share

மட்டு. சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடனை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட 5 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (26) உத்தரவிட்டார்.

மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சிபெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து கடந்த புதன்கிழமை (25) திகதி பிற்பகல் 01.30 மணியளவில் கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இதன்போது குறித்த பொலிசார் மீது சந்தேக நபர் மற்றும் இரு பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் கத்தியால் குத்தியும் பொல்லுகளால் அடித்து தாக்கியுள்ளனர்.

மேலும், இரு பொலிசாரும் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகிய பிரதான சந்தேகநபர் உட்பட 3 ஆண்கள் இரு பெண்கள் என 5 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போது எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...