16 28
இலங்கைசெய்திகள்

பிரதமர் ஹரிணிக்கு அரசியல்துறை ஆசிரியராக வர விரும்பும் ரணில்

Share

பிரதமர் ஹரிணிக்கு அரசியல்துறை ஆசிரியராக வர விரும்பும் ரணில்

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அரசியலமைப்பை எங்கே கற்றுக்கொண்டார் என்பது குறித்து ஆச்சரியமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

குருநாகல் (Kurunegala) – பன்னலயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்திலேயே அரசியலமைப்பை அவர் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என ஆச்சரியமாக உள்ளது.

இந்தநிலையில் அவர் அரசியலமைப்பை கற்றுக்கொள்ள விரும்பினால், தாம் அவருக்கு அரசியலமைப்பை கற்பிக்க முடியும்.

அத்துடன், கடந்த ஆண்டுகளில் அரச ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான தொழிற்சங்கங்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share
தொடர்புடையது
17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...

14 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ரூ. 1,945 இலட்சம் மீளப் பெற்றுக்கொடுப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1,945 இலட்சம்...