இலங்கைசெய்திகள்

உடல் சுகயீனம் ஏற்பட்ட மாவையை சந்தித்த புளொட் உறுப்பினர்கள்!

Share
18 15
Share

உடல் சுகயீனம் ஏற்பட்ட மாவையை சந்தித்த புளொட் உறுப்பினர்கள்!

திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவை புளொட் உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தகர் பிருந்தாவன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோரே இவ்வாறு சென்று நலம் விசாரித்துள்ளனர்.

இதன்போது மாவை சேனாதிராஜாவின் உடல்நலம் தொடர்பாக விசாரித்ததோடு அவருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.

இவர் தொடர்ச்சியாக நலமோடு தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 7
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில்...

4 7
இலங்கைசெய்திகள்

தேர்தல் பணிக்காக சென்ற இளம் பெண் அரசாங்க அதிகாரி உயிரிழப்பு

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க...

5 7
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்லைக்கழகத்தில் 11 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதைச் சம்பவத்தின் எதிரொலியாக பதினொரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப...

7 7
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதில் சிக்கல்

நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதற்கான மருத்துவ உபகரணங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக...