tamilni 37 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

Share

இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான மில்கோ (Milco) மற்றும் ஹைலண்ட் (Highland) உட்பட 33 பால் பண்ணைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் பால் பண்ணைகள் இந்தியாவின் அமுல்(Amul) பால் நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மில்கோவை விற்பனை செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள போதிலும் ‘ஹைலேண்ட்’ நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான அமைச்சரவை முன்மொழிவு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமன்றி உத்தேச திட்டத்தின் கீழ் (NLDB)க்கு சொந்தமான 21 பால் பண்ணைகளில் அதிககம, ரிதியகம, நாரம்மல மற்றும் பொலன்னறுவை பால் பண்ணைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 10
இந்தியாசெய்திகள்

படைவீரர் கொடி நாள் இன்று அனுசரிப்பு: முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமர் மோடி நிதி அளிப்பு.

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் திகதி...

MediaFile 9 1100x619 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிவாரண நிதி குளறுபடிக்கு அரச அதிகாரிகளே பொறுப்பு: யாழ் மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு விநியோகத்தில், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது...

G7joV9tbwAAL77S
இலங்கைசெய்திகள்

அமெரிக்க உதவியுடன் நிவாரணப் பணிகள் தீவிரம்: C-130J விமானங்கள் கட்டுநாயக்காவை வந்தடைந்தன! 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரணப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J...

images 8 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையம்: 21 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது! 

கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush)...