சபைக்கு வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்தி பிரதேசத்தின் நலன்களை வலுப்படுத்த வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான நிலப்பரப்புகளை வருமானம் ஈட்டும் வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையின் உறுப்பினர் துவாரகாதேவி ஜெயகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமைர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது பிரசத்தின் வருமான ஈட்டல் தொடர்பில் விவாதிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
சங்கானை பேருந்து நிலையத்தில் சபைக்கு சொந்தமான காணியிலுள்ள ஆலயத்தை மையப்படுத்தி பலர் உரிமைகோருவதும் பிரச்சினைகளில் ஈடுபடுவதமான நிலை காணப்படுகின்றது.
ஆனால் அந்த நிலப்பரப்பு பிரதேச சபைக்கரிய சொத்தாகும். இவ்வாறான நிலையில் சிறய ஒரு ஆலயமாக இருந்த குறித்த ஆலயம் தற்போது பெருப்பிக்கப்பட்டுவரும் நிலை காணப்படுகின்றது.
இதனால் சபைக்குரிய காணி மேலும் கையகப்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது. இந்த பிரச்சினையை சமய நிந்தனையோ அன்றி சமயத்திற்கு எதிரான செயற்பாடாகவோ பார்க்கக் கூடாது.
அந்த ஆலயத்தின் பொறுப்பை சபை ஏற்று நடத்த வேண்டும் என்றும் அக்காணியில் மேலும் பல கடைத் தொகுதிகளை அல்லது அங்காடிகளை அமைத்து சபைக்கு வருமானம் ஈட்டும் வழிவகைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
#SrilankaNews
Leave a comment