24 662ce64e484aa
இலங்கைசெய்திகள்

சஹ்ரானின் சர்ச்சைக்குரிய சத்தியப்பிரமாணம் : பிள்ளையான் பகிரங்கப்படுத்திய தகவல்கள்

Share

சஹ்ரானின் சர்ச்சைக்குரிய சத்தியப்பிரமாணம் : பிள்ளையான் பகிரங்கப்படுத்திய தகவல்கள்

சர்வதேச விசாரணைகளில் கூட எனது பெயர் கூறப்படவில்லை. நான் சிறையில் இருந்ததன் அடிப்படையில் எனக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தெரிவித்தேன். நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது என்று இாஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்)(Sivanesathurai Santhirakanthan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இது தேர்தல் ஆண்டு என்ற அடிப்படையில் எதிர்கட்சியினரும் வேறு சிலரும் ரணித்த அந்த ஜீவன்களை மையப்படுத்தி இன்னமும் விவாதப்பொருளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் அரசியலுக்காக என் மீதும் கை நீட்டுவதனை இங்கு அவதானித்தேன். அவர்களைப்பற்றி என்னால் கவலை மட்டும்தான் அடைய முடியும்.

எத்தனை விசாரணைகள் வந்தாலும் நான் எதிர்கொள்ளத் தயராகவே இருக்கின்றேன். 2012 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மதப் பயங்கரவாத விடயம் மெல்ல மெல்ல வெளியே வரத்தொடங்கியது அதற்கு பௌத்த பேரினவாத சில சாதுக்களும் கடும் போக்காக பேசினார்கள்.

அதையொட்டி முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமங்களில் ஆங்காங்கே சில விடயங்கள் நடக்கத்தொடங்கின. ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதம் உலகத்தில் உச்சம் தொட்டிருந்த நிலையில்தான் இங்கும் ஆட்சி மாற்றங்கள் நடந்தன. அப்போது ஆட்சியை பொறுப்பெடுத்தவர்கள் இதனை சரியாக கண்டு கொள்ளவில்லை.

இங்கு சனல் 4 சம்பந்தமாக பொதுவாக பேசுவார்கள். இந்த நிறுவனம் இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் அறியப்பட்ட நிறுவனம். இந்தக்குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 8 பேரை வைத்து சத்தியப்பிரமாணம் செய்யும் சஹ்ரான் ” நான் இஸ்லாத்துக்காக மரணிக்கின்றேன், அல்லாஹ்வின் கொள்கையை பின்பற்றி மரணிக்கின்றேன், எனது இரத்தம், சதை எல்லாவற்றையும் நான் அதற்காக அர்ப்பணிக்கின்றேன், இது போராட்டத்துக்கான ஆரம்பம், எமது மதத்திற்கு எதிரான எல்லோரும் காபிர்கள், மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் கொல்லப்பட வேண்டும், அவுஸ்திரேலியாவில் தங்களைக்கொன்று விட்டு இலங்கை வரும் சுற்றுலா பயணிகளை எல்லாம் கொல்லுங்கள்,கண்ட இடத்தில் கொள்வதுதான் எனக்ளுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை ”என அழகாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

இவையெல்லாம் கடந்து சிறிய சிறிய துண்டு விடயங்களை பிடித்துக்கொண்டு இங்கு பேசுகின்றார்கள். சனல் 4 வில் காட்டுகின்றபோது அது ஒரு பிசுபிசுப்பான நாடகம். அந்த சனல் 4 தயாரிப்பாளரிடம் ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய இதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனக் கேட்டார். அதற்கு அவர் எதுவும் இல்லை என்றார்.

ஆகவே இதில் எனது பெயரையும் இழுக்கின்றார்கள். சர்வதேச விசாரணைகளில் கூட எனது பெயர் கூறப்படவில்லை. நான் சிறையில் இருந்ததன் அடிப்படையில் எனக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணைக்குழுக்களுக்கு தெரிவித்தேன்.

நான் விடுதலைப்போராட்டத்தில் இருந்தவன் என்பதற்காக எல்லாவற்றையும் எனது தலையில் கொட்ட முடியாது. இங்கு உள்ள ஒரு பிஞ்சு பிள்ளை மக்களைக் குழப்புகிறது. எனவே மக்களை குழப்ப வேண்டாம் என சாணக்கியன் போன்ற சிறு பிள்ளைகளுக்கு கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடி: இலங்கையில் மின்சாரக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை முழுவதும் எரிபொருள்...

Untitled 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு 2026: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில்...

Untitled 43
உலகம்செய்திகள்

சர்வதேச எரிபொருள் நெருக்கடி: பிரிட்டனில் வரலாறு காணாத விலை உயர்வு!

ஐக்கிய ராச்சியத்தில் டீசல் விலை 2022 டிசம்பருக்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில்...

Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிராமப்புற வலுவூட்டலுக்கான ‘பிரஜசக்தி’ திட்டம்: ஜனாதிபதி செயலகத்தில் விசேட ஆய்வு!

சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், சமூகத்தில் பொருளாதாரப் பலன்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு...