பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் பலி

rtjy 79

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் பலி

ஹிக்கடுவை நாரிகம கடற்கரையில் நேற்று மாலை நீராடச் சென்ற பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் நேற்று மாலை 4.40 மணியளவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் உத்தியோகத்தர் வெளிநாட்டவரை பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

60 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version