2 31
இலங்கைசெய்திகள்

யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

Share

யாழில் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் இன்று காலைவரை திரும்பி வராததால் தேடுதலில் ஈடுபட்ட ஊரவர்கள், அவரது சடலமானது இன்று காலை பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்ததை அவதானித்துள்ளனர்.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், சடலத்தின் வாயில் காயம் ஒன்று காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...