tamilni 219 scaled
இலங்கைசெய்திகள்

தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மம்!

Share

தினேஷ் ஷாப்டரின் மரணத்தில் தொடரும் மர்மம்!

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவின் வேண்டுகோளுக்கமைய நீதிமன்ற அனுமதியுடன் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

தற்போது விசாரணைகள் முடிந்த நிலையில் மீண்டும் அவரது உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, உடலை தகனம் செய்வது பொருத்தமற்றது என்று பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை செய்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஷாப்டரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியது.

அதன்படி, கொழும்பு ஜாவத்தை மயானத்தில் ஷாப்டரின் மனைவி வாங்கிய காணியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 31ஆம் திகதி மீண்டும் நடத்தப்படவுள்ளது.

அன்றைய தினம் விசாரணைகளை மேற்கொண்ட ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவின் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...