பொதுமக்களின் பாவனைக்காக கேன்கள், போத்தல்கள் மற்றும் ஏனைய பாத்திரங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சில நேர்மையற்ற சக்திகள் இந்த சலுகையை துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளைப் பெற்று சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை அவதானித்ததாக அவர் குறிப்பிட்டார்.
வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக எரிபொருள் வரிசையில் நிற்பவர்கள் இவ்வாறான செயற்பாடுகளால் சிரமங்களை எதிர்கொள்வதாக எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.
பொதுமக்களின் தேவைக்கு போதுமான எரிபொருளை மாத்திரம் கொள்வனவு செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்களுக்கு தேவையான அளவு ஜெர்ரி கேன்கள் மற்றும் பாட்டில்களில் மண்ணெண்ணெய் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.
#SrilankaNews
Leave a comment