மக்கள் பிரதிநிதிகள் காணி சுவீகரிப்புக்கு துணைபோகின்றனர் என காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
யுத்தத்தின் பின்னரும் மக்களிடம் உறுதிப்பத்திரங்களை மிரட்டி சுவீகரித்துக் கொள்கின்றனர்.
பொது அமைப்புக்கள் என்ற வகையில் நாங்கள் இதற்கு தொடர்ச்சியாக கண்டன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இச்சூழ்நிலையில் எங்களுடைய அரசியல் தலைமைகள் இதனை தடுத்து நிறுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதே உண்மை. இது எமக்கான சந்தேகத்தை அதிகரிக்கின்றது.
காணி சுவீகரிப்பு சார்ந்த விடயங்கள் நாடாளுமன்றம் மற்றும் சர்வதேச மனித உரிமைத் தளங்களிலும் பேசுபொருள் ஆக்கப்படாமை படையினருக்கு வாய்ப்பாகவே அமைந்துள்ளதாக மக்கள் அமைப்பின் பிரதிநிதி இன்பம் மேலும் தெரிவித்தார்.
மருதங்கேணி பிரதேச செயலக பிரிவில் கரையோர மக்களின் காணிகளை கடற்படையினரும் இராணுவத்தினரும் ஆக்கிரமிப்பதற்கு அரச அதிகாரிகள் துணை போவதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இரட்ணசிங்கம் முரளீதரன் குற்றஞ்சாட்டினார்.
#SriLankaNews
Leave a comment