நாட்டில் உணவில்லாமல் நித்திரைக்கு செல்லும் மக்கள்!!

rohana piyathasa

நாட்டில் ஆறரை லட்சம்பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்கு செல்கின்றனர் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. தேங்காயொன்றின் விலை 100 ரூபா. 5 ஆயிரம் ரூபாவை அச்சிட்டு வழங்குவதால் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை.

குறிப்பிட்டளவு அரச ஊழியர்களே இருக்கின்றனர். சாதாரண மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?

நாட்டில் ஆறரை லட்சம்பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்கு செல்கின்றனர் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குழந்தைகளுக்கும் போஷாக்கு கிடைப்பதில்லை. என்ன செய்வதென சுதந்திரக்கட்சியிடம் பலரும் கேட்கின்றனர். நாம் தெளிவானதொரு முடிவை எடுத்துள்ளோம். “- என்றார்.

#LocalNews

 

Exit mobile version