மகிந்தானந்தவின் கைதினை வெடி கொளுத்தி கொண்டாடிய மக்கள்

Mahindananda Aluthgamage Anticipatory Bail

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க கரம்(Carrom) மற்றும் தாம்(Checkers/Daam) விளையாட்டு பலகைகள் இறக்குமதி செய்ததில் அரசுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாவலப்பிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மகிந்தானந்த, தனது பிறப்பிடமான நாவலப்பிட்டி தொகுதியில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கில் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெர்னாண்டோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version