இலங்கை வரலாற்றில் முதல் தடவை முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கல்வி அமைச்சும், சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை இலங்கை வரலாற்றில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது குறித்த யோசனை முன்வைக்கப்படுகின்றமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.