3 21
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறும் பேர்ல் அமைப்பு

Share

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறும் பேர்ல் அமைப்பு

இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் (The People for Equality and Relief in Lanka (பேர்ல்) அமைப்பு, புதிய ஒரு சட்ட விளக்கக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில், 2009 இல் இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு நிரூபித்துள்ளது.

ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வுடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், 2009 ஜனவரி முதல் மே 18 வரை தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் தனது கொடூரமான அட்டூழியங்களை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான’ மொழியில் மூடிமறைத்தது மற்றும் காசா உட்பட இதேபோன்ற இனப்படுகொலைச் செயல்களுக்கு வழி வகுத்தது” என்று பேர்லின் நிறைவேற்று இயக்குநர் மதுரா ராசரத்தினம் கூறியுள்ளார்.

எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் கூறிவரும், 2009 இல் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை முறையாக அங்கீகரிக்குமாறு பேர்ல் அமைப்பு, சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களை தமது அறிக்கையின் ஊடாக வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இனப்படுகொலைகளின் மிகவும் பொறுப்பான குற்றவாளிகளில் ஒருவரான, அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, “விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் மட்டுமே” இறுதி யுத்தத்தின்போது “எதிர்ப்பு மண்டலத்தில்” இருப்பதாகக் கூறியிருந்தமையானது, இனப்படுகொலைக்கான சாத்தியத்தை நிரூபிப்பதாகவும் பேர்லின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...