நேற்றைய தினத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அரச வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நுவரெலியா மாவட்ட நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனாலும் வைத்தியசாலையில் அத்தியவசிய மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தடையின்றி இயங்குவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குறித்த பணி பகிஷ்கரிப்பு 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாதகமான பதில் கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பு தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews