இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வது குறித்த விசேட அறிவிப்பு

4 40
Share

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வது குறித்த விசேட அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்குதல் வரையறுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கடவுச்சீட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் பாஸ் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடவுச்சீட்டு விநியோகம் வரையறுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளொன்றுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்யும் எண்ணிக்கை 400 ஆக வரையறுக்கப்பட உள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் தற்பொழுது கையிருப்பில் 40000 கடவுச்சீட்டு பாஸ் புத்தகங்களே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக கடவுச்சீட்டு புத்தகங்கள் கொள்வனவு செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதியின் பின்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ள காரணத்தினால் தற்பொழுது கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக ஒரு நாள் சேவையில் 1200 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் நிலையில் தற்பொழுது அவ்வாறு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.

இதனால் வழமையான நடைமுறைகளில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...