வடிகாலிலிருந்து பெறப்பட்ட பொதி : வேலைவாய்ப்பு மோசடி

24 6639bea2af649

வடிகாலிலிருந்து பெறப்பட்ட பொதி : வேலைவாய்ப்பு மோசடி

கொழும்பு(Colombo) – மகரகம பகுதியில் உள்ள வடிகால் ஒன்றிலிருந்து 180 கடவுச்சீட்டுக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடவுச்சீட்டுக்களை மகரகமயில் (Maharagama) உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சுமார் 500 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்களை தேடுபவர்களிடமிருந்து 260 மில்லியன் ரூபா பணத்தினை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, நிறுவன உரிமையாளர் பணத்தை மோசடி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version