மீண்டும் கூட்டணியாக இணையும் கட்சிகள்!

dayasiri jayasekara

தூய்மையான கட்சியாக இருக்கும் ஜே.வி.பி உடன் மீண்டும் கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் எவ்வித தடையும் இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது மோசடிகாரர்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். ஆகவே இரு கட்சிகளும் தூய்மையான அரசியல் கட்சியாக உள்ளது.

எனவே கூட்டணி அமைத்து இணைந்து செயற்படுவதில் சிக்கல்கள் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சி தரப்பில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட ஒத்தழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version