tamilni 107 scaled
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் ஜனாதிபதி

Share

நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கும் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதி அளவில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டால் நாடாளுமன்றின் செயற்குழுக்கள் அனைத்தும் இரத்தாகும் என்பதுடன் நாடாளுமன்றம் மீள ஜனாதிபதியினால் கூட்டப்பட்டதன் பின்னர் இந்த செயற்குழுக்கள் மீண்டும் புதிதாக செயற்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியினால் நாடாளுமன்றை அதிகபட்சமாக 2 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் முடியும். ஜனாதிபதி நாடாளுமன்ற ஒத்திவைத்து மீளவும் நாடாளுமன்றம் அமர்வுகள் நடைபெறும் தினத்தை அறிவிக்க முடியும்.

மேலும் இந்த புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் ஆகும் போது ஜனாதிபதி அக்கிராசன உரையை மேற்கொண்டு சம்பிரதாயபூர்வமாக அமர்வுகளை ஆரம்பித்து வைப்பார்.

தற்பொழுது கோப் குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்தி வைப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் கோப் தலைவர் இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

கிரிக்கெட் நிறுவனத்தின் திட்டமொன்றின் ஆலோசகராக பேராசிரியர் பண்டார கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே நிறுவனத்தின் சார்பில் பணியாற்றி வரும் ஒருவர் அந்த நிறுவனம் தொடர்பில் விசாரணை நடத்துவது பொருத்தமாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் அடிப்படையில் ரஞ்சித் பண்டாரவை கோப் குழு தலைமைப் பதவியிலிருந்து நீக்கும் வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...