ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடவுச்சீட்டு தொடர்பான வழக்கொன்றில் நீதிமன்றத்திற்கு இன்று வருகைத் தந்த டயானாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
கடவுச்சீட்டு வழக்கும் அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகம் தெரிவித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
வழக்கு தொடர்பில் ஏதும் கதைக்க விரும்பவில்லை அது பிரச்சினைக்குரியதாகும். அடுத்தது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அமைதியாக இருக்க விடுங்கள். அவர் இப்போது நோயாளி, அவருக்கு முடியாது என நிரூபணமாகியுள்ளது. அத்தோடு அவருக்கு வயதும் போய்விட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர், யுவதிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கட்சியை பாரம் கொடுங்கள். இது இப்போது கேலிக் கூத்தாகியுள்ளது.
எதிர்க்கட்சி என்றால் அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் தான். ஆனால் நாடாளுமன்றத்தில் தனிப்பட்டவர்களின் அழகு மற்றும் அவர்களின் உள்ளக பிரச்சினைகள் தான் பேசப்படுகிறது.
இதற்காகவா நாடாளுமன்றத்திற்கு இலட்சக் கணக்கில் செலவழிக்கப்படுகிறது. எனக்கு பாதாள குழுவினருடன் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் யாரும் வந்து செல்பி அல்லது புகைப்படம் பிடிப்பதற்கு கேட்டால் நான் மறுப்பதில்லை.
அப்படி செய்யாவிட்டால் திமிர்காரி என்பார்கள். வீதியில் ஒருவர் இருந்து புகைப்படம் எடுக்க என்னை அழைத்தாலும் செல்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

