தற்போது நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு இன்னும் இரு மாதங்களுக்கு தொடரக்கூடும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மா கப்பல்களின் தாமதம் மற்றும் களஞ்சிய கட்டண அதிகரிப்பு என்பன காரணமாக இத்தட்டுப்பாடு இரு மாதங்கள் நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களுக்காக வங்கி கடன் கடிதங்களையும் செலுத்த இயலாத நிலை நிலவுவதாக ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.
அத்தோடு இத்தகைய பால்மா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உள்நாட்டு பால்மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment