24 6623049f25656
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மக்களின் காவலனாக வாழ்ந்த அரசியல்வாதி – குவிந்த மக்கள் வெள்ளம்

Share

இலங்கையில் மக்களின் காவலனாக வாழ்ந்த அரசியல்வாதி – குவிந்த மக்கள் வெள்ளம்

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும அவர்களின் இறுதி பயணம் இலட்ச கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் நேற்று நடைபெற்றது.

இலங்கையின் சமகால வரலாற்றில் பெருந்தொகை மக்களின் பங்கேற்புடன் அரசியல்வாதி ஒருவருக்கு நடைபெற்ற இறுதி நிகழ்வாக இது கருதப்படுகிறது.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் அரச மரியாதையுடன் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் இரவு மத்துகம யடதோலவத்தையில் உள்ள இல்லத்திற்கு மக்களின் கண்ணீருக்கு மத்தியில் பூதவுடல் கொண்டுவரப்பட்டது.

அரசியல் தலைவரின் இந்த திடீர் மரணம் அப்பகுதி மக்களால் இன்னும் தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளதென குறிப்பிட்டுள்ளனர்.

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலின் இறுதிக்கிரியைகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் சடலத்துடன் அடக்கம் செய்யும் இடம் வரை சென்றுள்ளனர். இறுதி அஞ்சலி நிகழ்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட உயர்மட்ட அரசியல்வாதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இறுதி நிகழ்வில் கட்சி பேதங்கள் இன்றி பலரும் கலந்து கொண்டனர். மூவின மக்களும் பெருந்தொகையான அஞ்சலி செலுத்தினர்.

பாலித்த தேவரப்பெரும வாழும் காலத்தில் மக்களுக்காக வாழ்ந்த அரசியல்வாதியாக போற்றப்பட்டார். அவர் சமூக செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஐக்கிய தேசிய கட்சியில் நீண்டகாலமாக அரசியல்வாதியாக இருந்த பாலித்தவுக்கு ஏனைய அரசியல்வாதிகள் போன்று பெருந்தொகை சொத்துக்கள் எதுவும் இல்லை.

எனினும் விலைமதிப்பற்ற சொத்தான மக்களை அவர் பெற்றுள்ளார். அதனை நேற்றைய தினம் பங்கேற்ற மக்கள் வெள்ளம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

22 வருடங்களுக்கும் மேலான மக்கள் நட்புறவான அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும, மக்கள் மனதில் உண்மையான அரச சேவையின் பெறுமதியின் பல மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளதாக என அங்கு வந்த பலர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...