21 5
இலங்கைசெய்திகள்

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

Share

தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

இலங்கை (Sri Lanka) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் (Mannar) கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இராமேஸ்வர (Rameswaram ) கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மன்னார் நீதவான் நேற்று (05) வியாழக்கிழமை பிறப்பித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த நான்காம் திகதி காலை மீன் பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று (50) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை நேற்று (05) மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 14 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...