rtjy 321 scaled
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

Share

கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தில், கணக்காய்வு அலுவலராக தங்களை நியமனம் செய்ய வேண்டும் என 8 வருடம் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்கள் நால்வர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் மற்றும் 11 எதிர் மனுதாரர்களுக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த நால்வரையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தில் கணக்காய்வு உத்தியோகத்தர்களாக நியமனம் செய்யும் படி கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு, திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியனால் இன்று (27.07.2023) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

13வது திருத்தச் சட்டத்தில் அதிகார பரவலாக்கல் வழங்கப்பட்ட போதும் வடக்கு மாகாணம் மற்றும் தென் மாகாணமும் இத்தகைய நியமனம் வழங்கி இருக்கும் நிலையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர், அதிகாரியின் அசமந்தப் போக்கு, கவனயீனமான செயற்பாடுகள், 13வது திருசத்தச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட போதும் அதை செயற்படுத்தாமை, கடந்த 10 ஆண்டுகளாக இவ்வழக்கின் மனுதாரர்களுக்கு குறிக்கப்பட்ட நியமனங்களை வழங்காது இழுபறி நிலைமையை ஏற்படுத்தி காலதாமதப்படுத்தியமை போன்ற பல சட்ட விடயங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியின் உடன் நடைமுறைக்கு வர வேண்டும் என புதிய ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.

இன்றைய கட்டளையை உடனடியாக புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் இந்த நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய கௌரவ ஆளுநர் இவ்வழக்கில் எந்தவித விடயங்களையும் கையாளவில்லை என்றபோதும் பழைய ஆளுநர்களின் தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இந்த மனுதாரர்களின் எதிர்பார்க்கும் நியமனத்தை புதிய ஆளுநர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...