சுதந்திர தினத்தை புறக்கணித்த எதிரக்கட்சிகள்!!

jpg

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணித்துள்ளது.

நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பெருமெடுப்பில் சுதந்திர தினம் எதற்கு என்பது உட்பட மேலும் சில காரணங்களாலேயே அக்கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்துள்ளார்..

#SrilankaNEws

Exit mobile version