உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி: சஜித் குற்றச்சாட்டு

9 1

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பொலன்னறுவை – மின்னேரியவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது சஜித் பிரேமதாச மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டஅவர், இந்த அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை.

அதே போன்று உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி காரணமாக விவசாயிகளுக்கு எதுவித பிரதிபலனும் கிடைப்பதில்லை.

அவற்றுக்கு வரி விதிக்கமுன்னரே உருளைக்கிழங்கும், பெரிய வெங்காயமும் பெரும் தொகையாக இறக்குமதி செய்யப்படடு களஞ்சியப்படுத்தப்பட்டுவிட்டது.

விவசாயிகளின் பிரச்சினை மற்றும் யானை – மனித மோதல்களைத் தீர்ப்பதற்கான என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடாகும் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version