8 14
இலங்கைசெய்திகள்

அநுர அரசுக்கு எதிராக ரணில் – சஜித்தின் தீர்மானம்

Share

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்த எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டுள்ளன.

இந்தப் பேரணியை எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி நடத்துவதற்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பங்களிப்புடன் நடத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்த அரசியல் பயணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்ப்புப் பேரணிக்கான கூட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நுகேகொடையில் ஆம்பிக்கப்படவுள்ள இந்த அரச எதிர்ப்புப் பேரணியை நாடளாவிய ரீதியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...