tamilni 308 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டுப்பாடற்ற இணைய கடன்

Share

இலங்கையில் கட்டுப்பாடற்ற இணைய கடன்

இலங்கையில் கட்டுப்பாடற்ற இணைய கடன் வழங்குனர்களின் சந்தேகத்துக்குரிய நடைமுறைகள் தொடர்பில் மத்திய வங்கியின் மௌனம் குறித்து நீண்டகால குத்தகை(லீசிங்) மற்றும் தவணை கடன் செலுத்துவோர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அங்கீகரிக்கப்படாத இணைய கடன் வழங்குபவர்களிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பி செலுத்த கடன் பெறுபவர்களுக்கு சட்டப்பூர்வ கடமை இல்லை என்று நீண்டகால குத்தகை(லீசிங்) மற்றும் தவணை கடன் செலுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய வங்கிக்கு தாம் பல முறைப்பாடுகளை அனுப்பிய போதும், எந்த பதிலும் இல்லை, எனவே மத்திய வங்கியின் அதிகாரிகள் குறித்த கடன் வழங்கும் நிறுவனங்களால் பயனடைகிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் துணை செயலாளர் அசங்க சுமேத அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் டிஜிட்டல் கடன் வழங்கும் சேவைகளின் பயனர் தளம் 2021 ஆகஸ்ட்டில் 10,600 பயனர்களாக இருந்து, 2023 நவம்பரில் 125 மடங்காக அதாவது 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஒன்லைன் பேடே லோன் வழங்குனர்கள் 5-15 நிமிடங்களுக்குள் இணையத்தில் உடனடி பணக் கடன்களை வழங்கும் விளம்பரங்களை விளம்பரப்படுத்துகிறார்கள்.

எனினும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் அதிக தாமதக் கட்டணங்களுடன் சட்டவிரோத வசூல் நடவடிக்கைகளை அண்மைக்காலமாக குறித்த கடன் வழங்குனர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் இந்த கடன் வழங்குனர்கள், தங்கள் வசூல் நடைமுறைகளின் ஒரு பகுதியாக கடன் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை, அடிக்கடி துன்புறுத்துவதாகவும்¸ நீண்டகால குத்தகை(லீசிங்) மற்றும் தவணை கடன் செலுத்துவோர் சங்க துணைச்செயலாளர் அசங்க சுமேத அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...