24 6676de7e816c2
இலங்கைசெய்திகள்

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு விளம்பரங்களை செய்து நாட்டில் இயங்கிவரும் இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல கடன் வழங்கும் நிறுவனங்கள் சுற்றுலா விசாவில் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரால் நடத்தப்படுவதாகவும், அவை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை அல்ல என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

மேலும், இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டு கடனை பெறுவதாகவும், ஆனால் அந்த கடனுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உதாரணமாக, 15,000 ரூபாய் கடன் வாங்கினால், கடன் தொகையைத் தீர்க்க சுமார் 8000 ரூபாய் வட்டி அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் கடன் வழங்கும் ஆறு நிறுவனங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த கடன் வழங்குநர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 4 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்...

1768366804 PM Harini
செய்திகள்இந்தியா

உலகப் பொருளாதார மன்றத்தில் பிரதமர் ஹரிணி: சுவிட்சர்லாந்தில் 3,000 உலகத் தலைவர்களுடன் சந்திப்பு!

56-ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

prison
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறையில் அதிரடிச் சோதனை: முன்னாள் எம்.பி.க்கள் இருந்த வார்டில் 16 தொலைபேசிகள் மீட்பு – சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது,...

images 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

திருகோணமலை கடற்கரையோரத்தில் சர்ச்சைக்குரிய முறையில் புத்தர் சிலையை நிறுவி, கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் குற்றம்...