மக்களுக்கு வெங்காயம், முட்டைகளை பரிசளித்த கிறிஸ்மஸ் தாத்தா

tamilni 444

மக்களுக்கு வெங்காயம், முட்டைகளை பரிசளித்த கிறிஸ்மஸ் தாத்தா

இலங்கையில் தென் பகுதியான அல்பிட்டிய பிடிகல பிரதேசத்தில் கிறிஸ்மஸ் தாத்தா வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கியுள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறுவர்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தா பரிசு வழங்குவது வழமயானது.

எனினும் இம்முறை நத்தார் பண்டிகையின் போது கிறிஸ்மஸ் தாத்தா போன்ற ஆடையணிந்த ஒருவர் வீடுகளுக்குச் சென்று வெங்காயம் மற்றும் முட்டை என்பனவற்றை பரிசாக வழங்கியுள்ளார்.

மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதனால் இவ்வாறு முட்டை மற்றும் வெங்காயத்தை மக்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

விலை அதிகம் என்பதனால் தம்மால் அதிகளவில் இவற்றை விநியோகம் செய்ய முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version