தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

24 6600d768d44ad

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயத்தில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்த நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம்(23) மணப்பாறையில் உள்ள நகராட்சி வளாகத்தில் வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்ரனி பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எனினும் அவரது இந்த தீவிர நடவடிக்கைக்கான காரணங்கள் தெரியாத நிலையில் அருகில் உள்ள விற்பனை தளங்களின் சிசிரீவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version