பிரதான தேர்தல்களில் ஒன்று அக்டோபர் மாதத்திற்குள்

tamilni 149

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு பிரதான தேர்தல்களில் ஒன்றை இந்த வருடம் அக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நீண்ட இராஜதந்திர சேவைக்குப் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனைச் சந்தித்த போதே விவசாய அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், இது தேர்தல் ஆண்டு. 2024 இல் பன்னிரெண்டு மாதங்கள் இல்லை என எனது அமைச்சக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தினேன்.

இந்த வருடம் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதைக் கருத்தில் கொண்டு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்துவதாகவும் அமைச்சர், நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version