யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானது.
குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸை, பின்னால் சென்ற தனியார் பஸ் முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#SrilankaNEws
Leave a comment