யாழில் கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி
யாழ்ப்பாணம், இணுவிலில் இன்று மாலை நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும், குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஹையேஸ் ரக வாகனத்தில் பயணித்த நிலையில், இணுவில் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க முயன்றபோது விபத்து நடந்துள்ளது.
யாழ். கோண்டாவில் – காரைக்காலை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இனுவில் கிழக்கு புகையிரத கடவை பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (14.02.2024) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வானில் பயணித்த வேளை, இனுவில் கிழக்கு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, புகையிரதத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான மூவரில் கணவன் மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மனைவி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.