நண்பர்களுடன் நீராடச்சென்ற பாடசாலை மாணவனுக்கு விபரீதம்

tamilni 462

நண்பர்களுடன் நீராடச்சென்ற பாடசாலை மாணவனுக்கு விபரீதம்

நாவலப்பிட்டி கல்பொட நீர்வீழ்ச்சியில் நண்பர்கள் குழுவுடன் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (26.12.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.

கடுகன்னாவ, பானபொக்கவைச் சேர்ந்த 15 வயதுடைய பசிந்து சாமோத் என்ற பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

நண்பர்கள் குழுவுடன் தொடருந்தில் கல்பொடவுக்கு வந்த குறித்த சிறுவன் கல்பொட நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version