யாழில் ஓட்டப் போட்டியில் அசத்திய 76 வயதுடைய வயோதிபப் பெண்

tamilnaadi 119

யாழில் ஓட்டப் போட்டியில் அசத்திய 76 வயதுடைய வயோதிபப் பெண்

சுழிபுரம் – விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் வயோதிப பழைய மாணவர்கள் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறித்த போட்டியானது நேற்றையதினம்(15.03.2024) வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதன்போது 76 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்றியுள்ளனர்.

பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version