25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

Share

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள் தவறாக வழிநடத்தியதாக கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அன்செல்ம் டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தின் முன்னிலையில் நேற்று மதியம் சாட்சியமளிக்கும் போது டி சில்வா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

தங்கள் வாகனத்தின் மீது மூன்றாம் தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியில் விளம்பரப்படுத்துமாறு தங்களிடம் கேட்கப்பட்டது.

இருப்பினும், அந்தத் துப்பாக்கி பிரயோகம், வெலிகம பொலிஸாராலேயே மேற்கொள்ளப்பட்டதாக அன்செல்ம் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனர் தன்னையும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும் தவறாக வழிநடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...