தலைகீழாக பதவி முத்திரை பொறித்த அதிகாரி : சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஊடகவியலாளருக்கு விசாரணை

24 667618f9b05eb

தலைகீழாக பதவி முத்திரை பொறித்த அதிகாரி : சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஊடகவியலாளருக்கு விசாரணை

தனது பதவி முத்திரையை தலைகீழாக பொறித்து கடிதம் ஒன்றினை அனுப்பிய மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் த.உமாவினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் முகநூலில் பதிவிட்ட ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனை காங்கேசன்துறை கணிணி பொலிஸ் பிரிவினர் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்வதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர், பதவி முத்திரையினை தலைகீழாக பொறிக்கப்பட்டமை தொடர்பில் ஆதாரப்பூர்வமாக தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் உமா பொலிஸ் கணிணி பிரிவிற்கு முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனை வாக்குமூலம் வழங்க வருமாறு காங்கேசன்துறை கணிணி பொலிஸ் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

தலைகீழாக பொறிக்கப்பட்ட பதவி முத்திரை தொடர்பான கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாரிய விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version