10 1
இலங்கைசெய்திகள்

நுவரெலியாவில் பேருந்து விபத்து – 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில்

Share

நுவரெலியாவில் பேருந்து விபத்து – 42 இற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில்

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்தில் – 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவிலிருந்து சுற்றுலா சென்ற அதிசொகுசு தனியார் பேருந்து பாதையை விட்டுவிலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

குறித்த விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...

Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய...

Untitled 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் புதிய மைல்கல்: இந்த ஆண்டில் 7 இலட்சம் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள்ளேயே 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் என்ற...