நுவரெலியா வீதிகளில் இரவு நேரப் பயணம் தவிர்க்குமாறு சாரதிகளுக்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்!

articles2FWr2Y5lIU2nCaQPDYmf1Y

நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் எனச் சாரதிகளுக்கு மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு வீதி தடைப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

‘திட்வா’ புயலினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சில தரப்பினர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மாவட்ட செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Exit mobile version