எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி சிறிலங்கா பொதுஜன பெரமுன (மொட்டு) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இணைந்து நுகேகொடைக்கு வருவது மக்களுக்காக அல்ல, மாறாக மீண்டும் தங்களுக்கான அதிகாரத்தைக் கோருவதற்காகவே என்று முன்னணி சோசலிசக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் வசந்த முதலிகே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தக் குழுவை 2021ஆம் ஆண்டு மக்கள் விரட்டியடித்ததாகவும், எனவே 21ஆம் திகதி பேரணி நாட்டிற்குப் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பொதுப் பேரணியில் தான் சேரப் போவதில்லை என்று தெரிவித்த அவர், மக்கள் அங்கு வந்து இந்தக் குழுவைக் கூச்சலிட்டு விரட்டியடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பேரணியில் முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ளப்போவதில்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

