23 15
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

Share

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (27) வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள வன்னிப் பிளாசா விடுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியாவில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வு கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனின் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.

கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வவுனியாவில் உள்ள சபைகளில் 26 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...